புதிய ரக கொரோனா வைரஸ்: பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஜேர்மனி, பிரான்ஸ் நாடுகள் தடை!
In இங்கிலாந்து December 21, 2020 6:41 am GMT 0 Comments 2191 by : Anojkiyan

பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தீவிரமாக பரவி வருவதால், அந்த நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
அத்துடன் பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து வீதி, ரயில் மற்றும் கடல் பயணங்களையும் பெரும்பாலான நாடுகள் தடைசெய்துள்ளன.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த தடை உத்தரவு அமுலுக்கு வந்துள்ளதாக ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், புதிய ரக கொரோனா தீநுண்மி பிரித்தானியாவில பிற நாடுகளுக்குப் பரவுவதைத் தடுப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக நெதர்லாந்து கூறியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.