புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஜப்பானில் இனங்காணப்பட்டது!

கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஜப்பானில் இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேஸிலிருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா உறுதி செய்யப்பட்டது.
45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாறுபட்ட கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனத்துடனும், பிற நாடுகளுடனும் ஜப்பான் ஆலோசனை நடத்தி வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.