புதிய வகை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
In இலங்கை February 15, 2021 10:23 am GMT 0 Comments 1448 by : Dhackshala
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கொவிட் – 19 தொற்று தொடர்பிலான இராஜாங்க அமைச்சர், வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளுக்கு வெளியே வைரஸ் பரவுவதை குறைப்பதற்காக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலமையின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்துகொள்வது அவசியம் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ், கொழும்பு, அவிசாவளை, வவுனியா மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.