புத்தகப் பிரியன் அனலனின் காதல்…
July 7, 2018 3:38 pm GMT
ஒற்றைப் பாதை நீண்ட தூரப் பயணப்பட்ட கால்கள் ஓய்வு தா ஓய்வு தா என ஓயாமல் நச்சரிப்பது காதுகளை அடைத்தது. களைப்பெனும் உள்ளுணர்வில் உச்சஞ் தலையில் இறுக்கிய முட்டி பதம் பார்த்ததைப் போல் உச்சி வெயில் தலையில் இறங்கியது. அத்தனை துயரும் சட்டென மறைந்தே போனது எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். ஆளில்லாத அந்த இடத்தில் கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டேன்.
நான் புத்தகப் பிரியன் அனலன். கொஞ்சம் எழுத்தாற்றலும் உண்டு அதனால் ஓர் படைப்பின் நோக்கம் சிறுகிராமம் தேடி பயணப்படும் போதே இந்த சம்பவம்.
ஏன் நான் துயரைத் தாண்டி சிரித்தேன் என்ற கேள்விக்கு பதில் சொல்விடுகின்றேன். காதல் தான். உச்சி வெயிலில் என்ன காதலோ? என்ற ஏனளம் வேண்டாம். இது இலக்கியக் காதல். இலக்கியத்தோடு இணைந்த என் காதல்.
காதலியைப் பிரிந்து வந்து ஓரிரு நாட்கள் கடந்து விட்டது. சென்ற முறை ஓர் படைப்பிற்காக நான் பயணப்பட்டபோது ஓர் திங்கள் அவளிடம் பேசேவே இல்லை அதன் பின் அவளுடனான சந்திப்பின் போது அவள் கூறிய நினைவின் காரணமே என் சிரிப்பு…
அதாவது,
கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே
யாங்குமறந்து அமைகோ யானே? ஞாங்கர்க்
கடுஞ்சுரை நல்லான் நடுங்குதலைக் குழவி
தாய்காண் விருப்பின் அன்ன
சாஅய்நோக் கினளே மாஅ யோளே
மாமைநிறமுடையவள் என் காதலி. ஆசை மிகுதியால் விரைந்து என்னைத் தழுவிக்கொள்பவள். விருப்பம் தரும் பொலிவையுடையவள். குவிந்த மென்மையான மார்பை உடையவள். கொடிபோல நீண்ட கூந்தலை உடையவள்.
பக்கத்தில் மேயப்போன பால்தரும் சுரப்பிகளையுடைய நல்ல பசுக்களது, நடுங்கும் தலையையுடை கன்றுகள், அப்பசுக்களை விருப்பத்தோடு தலையை ஒருக்கணித்து, சாய்ந்து பார்ப்பதுபோன்று என்னைப் பார்க்கும் விருப்பமுடையவள். இத்தகைய அழகுடைய பாசம்மிக்க அவளை நான் எப்படி மறந்து இருப்பேன்?
குறுந்தொகை பாடல். நீண்ட பிரிவின் பின்னர் அவளை நான் சந்தித்த போது கொஞ்சம் ஏனளத்தோடு மிகை காதலோடு அவள் என்னிடம் கூறியது.
அட இலக்கியச் சிறப்பை அச்சமயமும் எண்ணி வியந்தேன் சிரித்தேன். காதலி முகம் கண்முன்னே வந்ததால்.
ஆகா அதோ ஓர் வண்டி வருகின்றது விரைவாக அவளைப் போய் சந்திக்கலாம் பின்னர் சந்திக்கின்றேன்….
-
கண்கள் கேட்ட வரம்!
காதல் வானில் கண்கள்தான் கௌரவத்துக்குரியவை! இதழ்கள்...
-
பார்த்தேன் ரசித்தேன்
அது ஒரு ஓய்வு நாள். எப்போதுமே கபிலனும் நண்பர்களும்...