புத்தாண்டு காலத்தில் பொலிஸாரின் சிறப்பு திட்டம்
In இலங்கை April 8, 2019 3:14 pm GMT 0 Comments 1713 by : Jeyachandran Vithushan
தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் விஷேட திட்டங்களை அமுல்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 20 ஆம் திகதிவரையிலான 10 நாட்களிலேயே அதிக வாகன விபத்துக்கள் பதிவாவது புள்ளிவிபரங்களில் இருந்து உறுதியாகியுள்ள நிலையில் அதனை தடுக்க இந்த சிறப்புத் திட்டங்கள் அமுல் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அதன்படி இம்முறை போக்குவரத்து கடமைகளுக்காக மட்டும் 8000 போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபடுத்தபப்டவுள்ளதாகவும், அவர்களில் சிவில் உடைகளில் பல பொலிஸார் தேர்ந்தெடுக்கும் பேருந்து வண்டிகளில் பயணம் செய்வர் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்ய முன்னெடுக்கப்படும் சிறப்புத் திட்டங்கள் அதிகரிக்கப்படவுள்ளதால் கையிருப்புக்கு மேலதிகமாக குடி போதையை பரிசீலனைச் செய்ய பயன்படும் 25 ஆயிரம் பலூன்களை இன்றைய தினம் இறக்குமதி செய்ததாகவும், அவை நாளை நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படம் எனவும் அவர் சுட்டிக்கடடினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த