‘புரவி’ புயலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாத நிலையில் மீனவ பெண்கள்
In இலங்கை December 19, 2020 5:03 am GMT 0 Comments 1655 by : Yuganthini

வடக்கு- கிழக்கு மாகாணங்களை அதிகளவில் பாதித்த புரவி புயல் கரையை கடந்து சொன்றாலும் அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அதன் கோர விளைவுகளை கடந்து செல்ல முடியாத நிலையில் இன்று வரை உள்ளனர்.
மீன் பிடியை வாழ்வாதாரமாக கொண்ட பல மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள், வலைகள், படகுகள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டும் நொருக்கப்பட்டும் உள்ளது.
இதனால் பல மீனவ பெண்களின் வாழ்கை வறுமையால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வரை என்ன செய்வது என்று அறியாமல் அவர்கள் தவிக்கின்றனர்.
இவை ஒரு புறம் இருக்க மீனவர்களின் வலைகளிலும் ரோலர் படகுகளின் மடிகளில் மிஞ்சுகின்ற சின்ன, சின்ன மீன்களை சேகரித்து அவற்றை கருவாடாக்கி வாழ்வாதாரத்தை கொண்டும் செல்லும் பெண்களின் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது.
நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய் என சிறியதொரு வருமானத்திற்காக காலை தொடக்கம் மாலை வரை மீனவர்களுக்கு வலை சீராக்கி கொடுத்தும், வலைகளில் கைவிடப்படுகின்ற சிறிய மீன்களை கருவாடாக மாற்றி அவற்றை விற்பனை செய்து வாழ்வாதாரத்தை கொண்டு சென்ற பெண்கள், கடந்து சென்ற புரவி புயலால் தொழிலையும் இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து செய்வதறியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து மழை பெய்யும் காலநிலை காணப்படுவதாலும் மீனவர்கள் அதிகளவில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமையினாலும், வாழ்கையை கொண்டு செல்ல முடியாத நிலையில் வங்கிகளில் கடன்கள் பெற்று கூட வாழ்க்கையை கடந்து செல்ல முடியாத நிலையில், தங்களுக்கு தற்காலிக நிவரணங்களையோ அல்லது மாற்று தொழில் வாய்ப்பையாவது வழங்குமாறு மீனவ பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.