பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோருக்கான வழக்கு விசாரணை திகதியிடப்பட்டது
In இலங்கை January 15, 2021 10:51 am GMT 0 Comments 1279 by : Yuganthini

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்வதற்கு உயர்நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
குறித்த 12 அடிப்படை உரிமை மனுக்களை, எதிர்வரும் மார்ச் 8, 9, 10 ஆகிய திகதிகளில் ஏழு நீதியரசர்கள் கொண்ட குழு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகள் உயர் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றப் போதிலும் அதனை தடுப்பதற்கு தவறிய குற்றச்சாட்டிலேயே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.