பூநகரியில் இளம் குடும்ப பெண் பட்டப்பகலில் கொலை- பொலிஸார் தீவிர விசாரணை!
In இலங்கை January 17, 2021 10:34 am GMT 0 Comments 1930 by : Yuganthini

கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தெளிகரையில் அமைந்துள்ள பெண்ணின் வீட்டில் வைத்தே அவர், கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் வயிற்றுப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள தெரிவிள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 37 வயதுடை ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.