பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு புதிய விருதுகள் அறிமுகம்!
In உதைப்பந்தாட்டம் May 7, 2019 6:33 am GMT 0 Comments 1804 by : Anojkiyan
விளையாட்டு துறையில் கொடிகட்டி பறக்கும் வீரர்கள், பணத்தை விட அவர்களின் திறமைக்கு கிடைக்கும் விருதுகளையே அதிகம் விரும்புகின்றனர்.
ஏனென்றால் அவர்கள் பெறும் பணத்தையும் விட, காலந்தோறும் அவர்களின் புகழ் பாட அந்த விருதுகளே பேசும் என்பதால் அவர்கள் விருதுகளையே அதிகம் நேசிக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக பிரபல விளையாட்டு, உயரிய விருதுகள் என வரும் போது சொல்லவா வேண்டும்…
வாருங்கள் உலகில் பல கோடி இரசிகர்களை கொண்ட பிரபல கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் உயரிய விருது குறித்த செய்திக்குள் செல்லலாம்…
உலகம் முழுவதும் பல கோடி இரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டுக்கு ஊக்கம் அளித்து பிரபலப்படுத்தும் வகையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கால்பந்து உலகில் தமது அதீத திறமைகளை வெளிக்காட்டும் வீரர், வீராங்கனைகளுக்கு, வழங்கப்படும் உயரிய விருதான சர்வதேச கால்பந்து சம்மேளன விருதுகள் இம்முறையும் அனைவரினதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளை தேர்வு செய்து பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அவ்வகையில், பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இரண்டு புதிய விருதுகளை பிபா அறிவித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டில் இருந்து சிறந்த பெண் கோல் காப்பளார், சிறந்த பெண்கள் அணி ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி, இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் பிபா விருது வழங்கும் விழாவில், பெண்கள் பிரிவில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் இந்த விருதுகளைப் பெற உள்ளனர்.
சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஆண் பயிற்சியாளர், சிறந்த பெண் பயிற்சியாளர், சிறந்த ஆண் கோல் காப்பளார், சிறந்த பெண் கோல் காப்பாளர், சிறந்த ஆண்கள் அணி, சிறந்த பெண்கள் அணி, சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருது, ஃபேர் பிளே விருது, இரசிகர்களின் விருது என மொத்தம் 11 பிரிவுகளில் பிபா விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.