பெண் ஊழியர் பாலியல் முறைப்பாடு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு
In இந்தியா April 20, 2019 8:31 am GMT 0 Comments 2109 by : Yuganthini

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, பெண் ஊழியரொருவர் தெரிவித்த பாலியல் முறைப்பாட்டை அவர் மறுத்துள்ளார்.
இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறைக் கால அவசர அமர்வு இன்று (சனிக்கிழமை) கூடியது.
இதன்போது தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது அவர் அதனை மறுத்துள்ளார்.
மேலும் ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளதாவது, “உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் உதவியாளர் என் மீது கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது.
அத்துடன் 20 ஆண்டு கால எனது சேவையில் சுமத்தப்பட்டுள்ள இந்த புகார் நம்ப முடியாதவொன்றாகும். குறித்த பெண்ணின் முறைப்பாட்டினால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த வாரம் சில முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ளமையாலேயே என் மீது பாலியல் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
ஆனால் இவைகளுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எனது பணிக்காலம் நிறைவடையும் வரை நேர்மையாக சேவையாற்றுவேன்.
இருப்பினும் பொய் முறைப்பாடு செய்துள்ள பெண் ஊழியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண்ணொருவர் பாலியல் முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.