பெலாரஸில் புதிய ஆர்ப்பாட்டங்களின் போது 1,000க்கும் மேற்பட்டோர் கைது!

பெலாரஸில் சர்ச்சைக்குரிய ஜனாதிபதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட புதிய ஆர்ப்பாட்டங்களின் போது 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி ஆர்வலரின் மரணம் தொடர்பாக பெருகிய கோபத்தின் மத்தியில் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் மின்ஸ்கில் எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தன. இதனால் எதிர்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக வியஸ்னா மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, 31 வயதான ரோமன் பொண்டரென்கோ, பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதால் வியாழக்கிழமை உயிரிழந்தார். இந்தநிலையில், இறப்பதற்கு முன்பு அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவருக்கு பூங்கொத்துகள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டின் நீண்டகால ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி வாக்கெடுப்பில், வென்றதாக கூறியதைத் தொடர்ந்து, அங்கு தலைநகர் மின்ஸ்க் மற்றும் பிற நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.