பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலில் கைதியொருவர் உயிரிழப்பு
In இலங்கை December 28, 2020 3:45 am GMT 0 Comments 1369 by : Dhackshala

வெயாங்கொடயில் இன்று (திங்கட்கிழமை) காலை பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலில் பல குற்றங்களுடன் தொடர்புடைய 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 19ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகள் இன்று காலை வெயாங்கொடயில் உள்ள ஒரு இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேநேரம், இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சந்தேக நபர் மீது மூன்று வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.