பேருந்து போக்குவரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
In இலங்கை December 6, 2020 3:45 am GMT 0 Comments 1494 by : Dhackshala

பேருந்து பயணங்களின்போது நாளை (திங்கட்கிழமை) முதல் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
விசேடமாக பாடசாலை நேரங்களிலும் அலுவலக நேரங்களிலும் குறித்த முறையில் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், “பயணிகளை இருக்கையில் மாத்திரம் அழைத்துச் செல்வதற்கு கடந்த தினம் பேருந்து பயணக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் சில வீதிகளில் அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
நாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். அவ்வாறு செயற்படும் பேருந்துகள் பொறுப்பேற்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.