பேலியகொடை புதிய மெனிங் சந்தை இன்று திறப்பு
In இலங்கை December 14, 2020 2:27 am GMT 0 Comments 1436 by : Dhackshala

பேலியகொடை புதிய மெனிங் சந்தை இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று பிற்பகல் 4.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்தார்.
நெரிசல் இல்லாமல் வர்த்தகத்தை முன்னெடுப்பதற்காக மொத்த விற்பனையாளர்கள் மட்டுமே தங்கள் விவசாய விளைபொருட்களை அந்த நாளில் கொண்டு வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமாக அனுப்ப வேண்டாம் என்றும் சாதாரண அளவை அனுப்புமாறு அனைத்து விவசாயிகளிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமக்கு அண்மையில் மீன் சந்தை உள்ளதால் குறித்த மொத்த வியாபார நடவடிக்கைகளை மாலை நேரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.