பேலியகொட மீன் சந்தையை திறப்பதற்கு எதிர்பார்ப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பேலியகொட மீன் சந்தையை மொத்த விற்பனைகளுக்காக இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீளத் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
கடற்றொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
இதற்கமைய பேலியகொட மீன் சந்தையில் பணப் பரிமாற்றங்களை இணைய வழியூடாக மேற்கொள்வது தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் அண்மைக் காலமாக எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், பேலியகொட மீன் சந்தையின் வியாபார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கின்ற முயற்சியின் முதற்கட்டமாக மொத்த வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.