பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
In இலங்கை January 19, 2021 5:50 am GMT 0 Comments 1459 by : Dhackshala

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகியது.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த சந்தை வளாகத்தின் கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றன.
கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவின் வழிப்படுத்தலுக்கு அமைய அந்த அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் இதன் கட்டுமான பணிகளை முன்னெடுக்கின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் 14 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது இவ்வேலைத்திட்டத்தின் பணிகள் முழுமையாக கைவிடப்பட்டன.
இச்சந்தை வளாகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நுகர்வோருக்கு கட்டுமானத் துறையின் அனைத்து மூலப்பொருட்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, சந்தை வளாகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம் CCity.lk நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பல கடைகளும் நேற்று உத்தியோகபூர்வமாக கடை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கொடுப்பனவுகள் தாமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் தேசிய இயந்திர நிறுவனத்தில் சேவையிலிருந்து விலகியிருந்த 50 ஊழியர்களுக்கு ரூ.233 இலட்சம் மதிப்பிலான உபகாரத்தொகை வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.