பைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்
In ஆசிரியர் தெரிவு January 26, 2021 10:36 am GMT 0 Comments 2031 by : Dhackshala

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்துகொள்ளுமா என்பது குறித்து தற்போதைக்கு தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஏனைய நாடுகள் மூலமாக இலங்கையில் உண்மையான அமைதி காணப்படுவதை உறுதிசெய்வதற்காக பாடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின்போதும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் மிகவும் மந்தகதியிலேயே காணப்படுகின்றது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மனித உரிமைக்கு ஆதரவளிப்பதை இலங்கையுடன் வலிந்து மோதலில் ஈடுபடுவதாக கருதக்கூடாது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.