பைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா!

ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே, பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், கடந்த 20ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த ஆம் திகதி, ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் கலவரத்தில் ஈடுபட்டதால், முன்னெப்போதும் இல்லாத அளவில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. தலைநகரில் 25 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை வைரஸ் தொற்றினால் இரண்டு கோடியே 53இலட்சத்து 90ஆயிரத்து 42பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு இலட்சத்து 24ஆயிரத்து 177பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.