பொதுமக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
In இலங்கை January 30, 2021 8:51 am GMT 0 Comments 1329 by : Jeyachandran Vithushan

நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்காக அரச தலைமைகளும் பொது மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராமத்துடனான உரையாடல் விசேட வேலைத்திட்டத்தின் 8 ஆவது திட்டம் மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில பகுதியில் இடம்பெற்றது.
இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.