பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட கர்நாடகாவில் தடை
In இந்தியா December 12, 2020 10:31 am GMT 0 Comments 1376 by : Yuganthini

பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி, புத்தாண்டு கொண்டாட தடைவிதிக்க கர்நாடகா அரசு தீர்மானித்துள்ளது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் பேரிடர் மேலாண்மை குழுவினருடன் ஆலோசனையொன்றினை நடத்தியுள்ளனர்.
அதில், மக்கள் அதிக அளவில் ஒன்று கூட அனுமதி வழங்கினால் அது கொரோனா தொற்றை அதிகரிக்க வழிவகுக்கும் என்று பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்தே பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுவுள்ளதாக அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்ட கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் அரசாணை வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.