பொது மக்களுக்கு கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை
In ஆசிரியர் தெரிவு February 13, 2021 7:37 am GMT 0 Comments 1395 by : Jeyachandran Vithushan

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு பொது மக்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஆரம்ப சுகாதார மற்றும் கொவிட் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர், பொது மக்களின் உதவியின்றி இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
பயணங்களை மட்டுப்படுத்தவும், அதிகளவிலான மக்கள் இருக்கும் இடங்களைத் தவிர்க்கவும், முக்கவசம் அணியவும், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர், வைரஸை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் பி.சி.ஆர். சோதனை முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் சிறிய தாமதங்களும் இந்த அதிகரிப்புக்கு ஒரு காரணம் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.