பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்றவர் மாயம்!
In இலங்கை January 2, 2021 9:21 am GMT 0 Comments 1605 by : Jeyachandran Vithushan

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச்சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று கடலில் நீராடச்சென்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, காணாமல் போயுள்ள நபர் திருகோணமலை சேருவில பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையாற்றும், பொதுச் சுகாதார வெளிக்கள அலுவலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
28 வயதுடைய குறித்த நபருக்கு 3 வயதுடைய குழந்தை ஒன்று உள்ளதாக பொலிஸாரால் கணடறியப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.