Update- பொத்துவில் முதல் பொலிகண்டி-நெளுக்குளம் நோக்கி நகருகிறது பேரணி
In இலங்கை February 6, 2021 4:50 am GMT 0 Comments 1560 by : Yuganthini
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம், பண்டாரவன்னியன் சதுக்கத்தில் நினைவு பேரெழுச்சியை தொடர்ந்து நெளுக்குளம் நோக்கி தற்போது நகர்ந்து கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் குறித்த பேரணியில், தொடர்ச்சியாக அதிகளவானோர் பங்கேற்று வருகின்றனர்.
பொத்துவில் முதல் பொலிகண்டி- 4ஆம் நாள் பேரணி வவுனியாவில் ஆரம்பம்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் நான்காவது நாளாக இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குறித்த பேரணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி வருகின்றார்கள்.
இதேவேளை, வடக்கு- கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், பேரெழுச்சிப் பேரணியானது கிளிநொச்சி, வவுனியா சென்று மன்னார் ஊடாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.