பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியால் மக்களுக்கு எந்த இலாபமும் கிடையாது – டக்ளஸ்
In இலங்கை February 6, 2021 10:51 am GMT 0 Comments 2513 by : Jeyachandran Vithushan
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக பேரெழுச்சிப் பேரணி, சுயலாப நோக்கத்திற்காக இடமபெருவதாகவும் இதனால் எதுவும் நடக்க போவதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்கான முயற்சியே இது என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் இந்தப் பேரணி மூலம் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்தோடு கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் காணிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.