கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் முன்னெடுப்பு
In ஆசிரியர் தெரிவு February 3, 2021 4:22 am GMT 0 Comments 2670 by : Dhackshala

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், கொட்டும் மழையிலும் போராட்டக்காரர்கள் தமது நடைபவணியை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கலையரசன், இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று ஆரம்பம்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளதுடன், இந்த தொடர் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவினை அண்மையில் வழங்கியிருந்தது.
சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி இந்த பேரணி ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம், இந்த போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.