பொன்சேகாவிற்காக அமைச்சு பதவியை துறக்கின்றார் அர்ஜுன ரணதுங்க!
In ஆசிரியர் தெரிவு April 29, 2019 12:29 pm GMT 0 Comments 4193 by : Jeyachandran Vithushan

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தனது அமைச்சு பதவியை துறக்க முடிவு செய்துள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றபோதே அவர் இந்த முடிவை எடுத்திருந்ததாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் சரத் பொன்சேகாவை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரியிடம் கடிதம் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி, அமைச்சரவையில் 30 அமைச்சர்களே இருக்க முடியும். இதில் மற்றொரு உறுப்பினர் இராஜினாமா செய்தால் மட்டுமே சரத் பொன்சேகா அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்
-
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ
-
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச
-
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பி
-
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை
-
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந
-
முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார
-
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி