பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட்டமைக்கு கமல் பாராட்டு
In இந்தியா November 22, 2020 11:21 am GMT 0 Comments 1511 by : Dhackshala

சென்னை தவிர்த்து மாநிலத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வார விடுமுறை வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசின் முடிவுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஏனை அரசு ஊழியர்களைப் போல் பொலிஸ் துறையினருக்கும் சுழற்சி முறையில் ஓய்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட நேர வரையறையின்றி கடமையைச் செய்யும் பொலிஸாருக்கு ஓய்வு எடுக்கும் உரிமை உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு. (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2020
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.