பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பிற்கான உடற்தகுதிகாண் பரீட்சை!
In இலங்கை January 26, 2021 8:57 am GMT 0 Comments 1387 by : Yuganthini
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்தகுதிகாண் பரீட்சை, வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
குறித்த பரீட்சையில் வட.மாகணத்தை சேர்ந்த 551 பரீட்சார்த்தகர்கள் கலந்துகொண்டனர். ஏற்கனவே அவர்களிற்கான நேர்முகத்தேர்வுகள் கடந்த வருடம் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றையதினம் அவர்களிற்கான உடற்தகுதிகாண் பரீட்சை இடம்பெற்றிருந்தது.
வவுனியாமாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் லால்டி செனவிரத்துனவின் மேற்பார்வையில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவினர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.