போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா!
In இலங்கை February 18, 2021 11:45 am GMT 0 Comments 1156 by : Vithushagan

விவசாயிகள் அறுவடை நிறைவுபெற்றதும் தமிழர்களினால் பாரம்பரியமாக செய்யப்பட்டுவரும் களவெட்டி பொங்கல் விழா இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தமிழர்களின் கலைகலாசர பண்பாட்டு விழுமியங்களை எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் கலாசார திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
தற்போது அறுவடை காலம் நடைபெற்றுவரும் நிலையில் அறுவடையை பூர்த்திசெய்வோர் வயல் நிலத்தில் பொங்கிப்படைத்து பூமாதேவிக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் வகையில் அனுஸ்டித்துவருகின்றனர்.
இந்த பாரம்பரிய செயற்பாட்டினை எதிர்கால சந்ததியும் கடைப்பிடிக்கவேண்டும் என்ற நோக்குடன் இந்த நிகழ்வு வெல்லாவெளி,விவேகானந்தபுரம்,ஆயிரம்கால் மண்டப ஆலயம் என்ற வரலாற்று சிறப்புக்கொண்ட பழனியர் வட்டை ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆயிரங்கால் ஆலயத்தில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச கலாச்சார உத்தியோகஸ்தர் ஆ.பிரபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தல் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாள ஆர்.ராகுலநாயகி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இதன்போது போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் ராகுலநாயகி அவர்களினால் நந்திக் கொடி ஏற்றப்பட்டு உதவிப் பிரதேசசெயலாளர் ஏற்பட்டதை தொடர்ந்து நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புவனேந்திரன் வேளான்மைக்கு விசேட பூசை மேற்கொள்ளப்பட்டு, பண்டைய மரபு வழிபாடுகளுக்கு ஏற்ப வேளாண்மை வெட்டப்பட்டு,உப்பட்டி கட்டப்பட்டு பிரதேச செயலாளரினால் வேளாண்மை கதிர்களை ஊர்வலமாக ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்ட சூடுகள் வைக்கப்பட்டு நெற்கதிர்களை கம்புகளால் அடித்து அபரிகட்டி நெல் தூற்றப்பட்டு உரலில் போட்டு நெல்லை இடித்து மண் பானையில் களபட்டி பொங்கல்விழா இடம்பெற்றன
இதன்போது பாஞ்சாலி கலைக்கழகத்தின் தலைவர் கலாபூசணம் தணிகாசலம் களவெட்டி எனும் தலைப்பில் கவியரங்கு நிகழ்வு நடைபெற்றதுடன் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.