போர்மியுலா வன் பந்தயத்திற்கான பரிசோதனை ஓட்டங்கள் பஹ்ரேனில் சூடுபிடித்துள்ளன!
In விளையாட்டு April 4, 2019 7:17 am GMT 0 Comments 1949 by : adminsrilanka
பிரித்தானியாவின் வில்லியம்ஸ் அணியின் சாரதி ஜோர்ஜ் ரசல், மந்தமான ஓட்ட வேகத்தைக் கொண்ட மெர்ஸிடிஸ் கார் ஒன்றை போர்மியுலா வன் பந்தயத்திற்கு ஏற்ற வகையில், மாற்றியுள்ளார்.
குறித்த காரை தரமுயர்த்தியதன் பின்னர் நேற்று (புதன்கிழமை) பஹ்ரேனில் உள்ள பந்தயப் பாதைகளில் அதனை சோதனை செய்து பார்த்தார். 21 வயதான பிரித்தானிய வீரரான ரசல், கடந்த வருடம் இடம்பெற்ற போர்மியுலா 2 கார் பந்தய போட்டியின் தலைப்பை வெற்ற வீரராவார். அதேவேளை அவர் கடந்த மாதம் வில்லியம்ஸ் அணி சார்பாக போர்மியுலா வன் போட்டியில் கலந்து கொண்டதுடன், போராடி வெற்றியீட்டினார்.
தனது மெர்ஸிடிஸ் காரை பரிசோதனைக்கு உட்படுத்திய ரசல், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஹங்கேரியில் இடம்பெற்ற போட்டியில் பந்தய சாதனையை படைத்தார். அதேவேளை, பஹ்ரேனில் உள்ள பந்தய சுற்றுப்பாதையில் 1 நிமிடம் 29.029 செக்கன்களில் இலக்கை நிறைவு செய்து பெஸ்ட் லெப் சாதனையையும் படைத்துள்ளார்.
நேற்று முன்தினம் பெய்த கடும் மழையை அடுத்து அங்கு சற்று வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலை நிலவுகின்றது. இதனால் பந்தய கார்களை வேகமாக செலுத்துவதற்கு ஏதுவான சூழல் உருவாகின்றன.
நேற்றைய பந்தய கார் பரிசோதனையில் ஐந்து முறை க்ரோன் பிரி சாம்பியன் பட்டத்தை பெற்ற லெவிஸ் ஹெமில்டனும் கலந்து கொண்டார். இதேவேளை, மெக்ஸிகோவின் செர்ஜியோ பெரெஸ் இரண்டாவது மிக வேகமாக கார் பந்தய வீரர் என்பதுடன் அவர் தனது பெராரி காருடன் சோதனை ஓட்டத்தில் கலந்து கொண்டார்.
இது தவிர , 7 தடவைகள் உலக சாம்பியன் பட்டத்தை வெற்றி கொண்ட மைக்கெல்லின் 20 வயதான புதல்வர் Mick Schumacher ரும், தனது அல்ஃபா ரோமியோ காருடன் நேற்று முன்தினம் கலந்து கொண்டார்.
அத்துடன் வில்லியம்ஸ் அணியின் கனடா வீரர் நிக்கலஸ் லடிஃபி மிகவும் மந்த கதியான ஓட்டத்தை வௌிப்படுத்தியதுடன் 1 நிமிடம் 32.198 செக்கன்களிலேயே பந்தய தூரத்தை கடந்தார். இந்த போட்டிகள் 70 லெப்ஸ்களுடன் ஆறாவது நாளில் நிறைவடைந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.