மகாத்மா காந்தியால் எனக்கு இந்தியா மீது ஈர்ப்பு வந்தது – ஒபாமா
In இந்தியா November 17, 2020 8:55 am GMT 0 Comments 1355 by : Dhackshala

குழந்தைப் பருவத்தில் இராமாயண, மகாபாரதக் கதைகளைக் கேட்டதாகவும் மகாத்மா காந்தியால் தனக்கு இந்தியா மீது ஈர்ப்பு வந்ததாகவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
‘ஏ பிராமிஸ்டு லேண்டு’ என்னும் பெயரில் அவர் எழுதியுள்ள நூலிலேயே, இந்தோனேசியாவில் தான் வளர்ந்தபோது இராமாயணஇ மகாபாரதக் கதைகளைக் கேட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கையும் இரண்டாயிரம் இனக் குழுக்களையும் எழுநூற்றுக்கு மேற்பட்ட மொழிகளையும் இந்தியா கொண்டுள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகாத்மா காந்தியால்தான் இந்தியா மீது தனக்கு ஈர்ப்பு வந்ததாகவும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அஹிம்சைப் போராட்டத்தைக் கையாண்ட அவர் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.