மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமுல்!
In இந்தியா February 19, 2021 2:47 am GMT 0 Comments 1188 by : Krushnamoorthy Dushanthini

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன்படி அமராவதி மற்றும் யவத்மால் ஆகிய மாவட்ட நிர்வாகங்களில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பொதுமுடக்கம் கடுமையாக்க இருப்பதாகவும், மக்கள் சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 4 ஆயிரத்து 787 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த இருமாதங்களில் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.