மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு – திரிபுராவில் 81 சதவீத பதிவு

முதற்கட்டமாக நடந்த மக்களவைத் தேர்தலில் திரிபுராவில் 81 சதவீத வாக்குகளும், மணிப்பூரில் 78 சதவீத வாக்குகளும் அதிக வாக்குப்பதிவுகளாக பதிவாகின.
மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத் தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது.
இதுபோலவே, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 18 மாநிலங்களில், 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் தற்போது வெளியோகியள்ளது. அதன் விவரம் வருமாறு:
திரிபுரா – 81.23%, மேகாலயா – 62%, லட்சத்தீவுகள்: 65.9%, நாகலாந்து – 68%, மணிப்பூர் – 78.20%, தெலுங்கானா – 60.57%, அசாம் – 68%, உத்தர பிரதேசம் – 59.77%, பிஹார் – 53.06% ஆகும்.
மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி மே 19அம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மே 23ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.