மக்களவைத் தேர்தல்: மாவோயிஸ்டு நடமாட்டத்தை தடுக்க பாதுகாப்பு தீவிரம்
In இந்தியா April 17, 2019 8:41 am GMT 0 Comments 2249 by : adminsrilanka

கேரள மாநிலத்தின் நீலகிரி தொகுதியில் மாவோயிஸ்டுக்களின் நடமாட்டத்தை தடுப்பதற்காக நக்சல் தடுப்பு பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கள் நாளை(வியாழக்கிழமை) நடைபெறவிருப்பதால் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி வாக்குப் பதிவுகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் ஜலீல் என்ற மாவோயிஸ்டு சுட்டுக் கொல்லப்பட்டதை முன்னிட்டு மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்க கோரி பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டிவருகின்றனர்.
அதேவேளை நீலகிரி தொகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிரடிபடையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர், பழங்குடியின மக்களின் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்துக்குள் மாவோயிஸ்டுக்கள் நுழைந்து மக்களை அச்சுறுத்தக் கூடாது என்பதற்காத 200 அதிரடிப்படையினர், நக்சல் தடுப்பு பிரிவில் 50 பேரும், கமாண்டோ பயிற்சி முடித்த 44 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் உள்ளூர் பொலிஸார் 1400 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி தொகுதியை பொறுத்த வரை 78 வாக்குசாவடிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.