மக்களவை தேர்தலில் பா.ஜ.க தேசிய தலைவர் வாக்கினை பதிவு செய்தார்
In இந்தியா April 23, 2019 6:51 am GMT 0 Comments 2548 by : Yuganthini

இந்தியாவில் மக்களவையின் மூன்றாம் கட்ட தேர்தல் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவும், தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, தனது மனைவியுடன் சென்று இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்களித்துள்ளார்.
அகமதாபாத்திலுள்ள நரன்பூரா துணை மண்டல அலுவலக வாக்குச்சாவடியிலேயே அமித்ஷா, தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
குறித்த மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் வாக்களித்துள்ள நிலையில் அமித்ஷாவும், தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
குஜாரத்திலுள்ள 26 தொகுதிகளுக்கும் கேரளாவின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் தற்போது இடம்பெறுகின்றன.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்பதிவு இதுவரை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்பட
-
தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்த அவசர
-
கொரோனா தடுப்பூசிகளை பெற்றவர்களால் கொரோனா தொற்று பரவக் கூடும் என இங்கிலாந்தின் பிரதி தலைமை மருத்துவ அ
-
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவ
-
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் 09 பேர் கைது செய்யப்பட்
-
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் இருந்து ஒரு சுரங்கத் தொழிலாளி மீட்கப்பட்டு சிகிச்
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 326 பேர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வ
-
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற
-
தமிழை மத்திய அரசும் பிரதமரும் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ள