மக்களின் அபிலாஷைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்குவோம் – யாழில் மே தின நிகழ்வு
In இலங்கை May 1, 2019 6:17 am GMT 0 Comments 2323 by : Dhackshala

‘தமிழ் தேசியத்தையும் சமூக மாற்றத்தையும் முன்னிருத்தி மக்கள் சக்தியை உருவாக்குவோம், மக்களின் அபிலாசைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம்’ என வலியுறுத்தி 2019ஆம் ஆண்டுக்கான மே தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம், வட.மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், புதிய அதிபர் சங்கம், வடமராட்சி கிழக்கு பிரதேச குழு ஆகியன இணைந்து இந்த நிகழ்வை நடத்தியிருந்தன.
இதன்போது இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்த்த ஞாயிறன்று உயிர்நீத்த உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி லெலுத்தப்பட்டது.
தேசம், இறைமை, சுயநிர்ணயம், சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண குரல் கொடுப்போம், இவை இல்லாத அரசியல் தீர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம், உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் உள்ளிட்ட 14 அம்சங்கள் மே தின பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என காங்கிரஸ் கட்சியின் முன
-
நடிகர் சந்தானம் ஜான்சன்.கே இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திர
-
வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி
-
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ந
-
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல்
-
பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச்சீரற்ற தன்மை நிலவ
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின்
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கல