மக்களின் போராட்டத்தினால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட கிராமம்
In இலங்கை January 22, 2021 8:54 am GMT 0 Comments 1594 by : Yuganthini

படல்கும்புரைப் பகுதியின் அலுப்பொத்தை கிராமத்தினை 46 நாட்கள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தி முடக்கியிருந்தமையை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குறித்த முடக்கத்தினால், தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து மேலிட உத்தரவின் பேரில் பொது சுகாதாரப்பிரிவினரால் அலுபொத்தை கிராமம் தனிமைப்படுத்தலிருந்தும் முடக்கப்பட்டதிலிருந்தும் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் படல்கும்புரை- அலுப்பொத்தை கிராமத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்து, பொது சுகாதாரப் பிரிவினர், அக்கிராமத்தை தனிமைப்படுத்தி முடக்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.