மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள நோட்ரே டாம் தீ விபத்து!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அமைந்துள்ள வரலாற்று புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதென பிரான்ஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தின், முக்கிய பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வருடந்தோறும் மில்லியன்கணக்கான மக்கள் குறித்த தேவாலயத்திற்கு விஜயம் செய்கின்றனர். இந்நிலையில், அவர்களும் இந்த விபத்துக் குறித்து கவலையடைந்துள்ளனர்..
ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழைமையான தேவாலயம் தீக்கிரையானமை தம்மை மனரீதியாக பாதித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த தீ விபத்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது பிரான்ஸ் வரலாற்றில் சோகநிகழ்வு எனவும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். மேலும், மிகப்பழைமை வாய்ந்த இப்பேராலயத்தின் கட்டமைப்பு தற்போது வலுவிழக்கும் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்துத் தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதோடு, பேராலயத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்துவரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்னர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்