ரஜினிகாந்த் தேர்தல் ஆணையகத்தில் கட்சியின் பெயரைப் பதிவு செய்துள்ளதாக தகவல்!
In இந்தியா December 15, 2020 9:32 am GMT 0 Comments 1592 by : Dhackshala

நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மாத இறுதியில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகத் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 234 தொகுதிகளுக்கும் பொதுசின்னம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாபா படத்தில் இடம் பெற்ற ஹஸ்தா முத்திரை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ரஜினி தரப்பு கேட்டதாகவும், அந்தச் சின்னம் ஒதுக்கப்படாததால், முச்சக்கரவண்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தவர் குறித்த விபரம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.