மக்கள் பயண நடவடிக்கைகள் தொடர்பில் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் வசிக்கும் மக்கள் பயண நடவடிக்கைகள் தொடர்பில் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப்பரவல் இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மேல்மாகாணத்தில் தொடர்ச்சியாக நாளாந்தம் 200 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்படுகின்றனர்.
இது அவதானத்திற்குரிய விடயம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் மேல்மாகாணத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் செயற்பாடு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.