மடு கல்வி வலயத்தில் 61 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு
In இலங்கை January 18, 2021 9:13 am GMT 0 Comments 1771 by : Dhackshala
மடு கல்வி வலயத்தில் 61 பேருக்கு ஆசிரியர் நியமனம் இன்று (திங்கட்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு வலய கல்வி அலுவலகத்தில் தேசிய கல்வியில் கல்லூரியில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த 61 ஆசிரியர்களுக்கே இவ்வாறு நியமனம் வழக்கி வைக்கப்பட்டது.
குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு மடு வலய கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன் தலைமையில் காலை 9.30 மணிக்கு மடு வலய கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம விருந்தினராக வட. மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் திருமதி.அஞ்சலி சாத்தசீலன் மற்றும் வலய கல்வி அலுவலக அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.