மட்டக்களப்பிலும் மகாத்மா காந்தியின் 73வது சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது
In இலங்கை January 30, 2021 9:38 am GMT 0 Comments 1536 by : Yuganthini
மகாத்மா காந்தியின் 73வது சிரார்த்த தினம் இன்று (சனிக்கிழமை) இலங்கையின் பல பாகங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் சிரார்த்த தின நிகழ்வு, இன்று காலை நடைபெற்றது.
காந்திசேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் பாரதிதாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
காந்திப்பூங்காவிலுள்ள காந்தியின் உருவச்சிலைக்கு அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது மகாத்மா காந்தியினால் விரும்பி பாடப்படும் பஜனைப்பாடல் பாடப்பட்டது. அத்துடன் மகாத்மா காந்தியின் 73வது சிரார்த்த தினத்தினை குறிக்கும் வகையில் 73மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார ஊழியர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.