மட்டக்களப்பில் அதிகரித்துவரும் கொரோனா: மொத்த பாதிப்பு 400ஐ கடந்தது!

மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 420 அதிகரித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் என அவர் இன்று (புதன்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் 12 பேர் என்பதுடன், காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி சுகாதாரப் பிரிவுகளில் தலா நால்வரும் வெல்லாவெளி சுகாதாரப் பிரிவில் மூவரும் களுவாஞ்சிக்குடி சுகாதாரப் பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பில் இதுவரை தொற்று கண்டறியப்பட்ட 420 பேரில் 145 பேர் குணமடைந்துள்ளதுடன் நால்வர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் எழுமாறாக பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியின் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல்
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப