மட்டக்களப்பில் 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா
In இலங்கை January 18, 2021 8:04 am GMT 0 Comments 1457 by : Yuganthini
மட்டக்களப்பு அரசடி கிராமசேவகர் பிரிவில், மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- அரசடி கிராம சேவகர் பிரிவில், இன்று (திங்கட்கிழமை) 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மூர் வீதியில் உயிரிழந்த 79 வயதுடைய முதியவர் ஒருவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த கிராமசேவகர் பிரிவு முடக்கப்பட்டதுடன் உயிரிழந்த குறித்த நபரின் வீட்டில் உள்ளவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று குறித்த பகுதியைச் சோ்ந்த 100 பேருக்கு மாநகரசபை பொதுச்சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.