மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல் நிகழ்வு
In இலங்கை December 29, 2020 11:04 am GMT 0 Comments 1469 by : Yuganthini
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
ஆலயங்களில் மார்கழி மாதங்களில் நடைபெற்றுவரும் திருவெம்பாவை உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
நாளைய தினம் ஆருத்திரா தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ள நிலையில் இன்று ஆலயங்களில் திருவாசகமுற்றோதல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்ததரராஜ குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்று இந்த திருவாசகமுற்றோதல் நிகழ்வு நடைபெற்றது.
திருவெம்பாவை உற்சவமானது நாளை அதிகாலை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.