மட்டு. தற்கொலை குண்டுதாரியின் தாயார் காத்தான்குடியில் கைது
In இலங்கை April 26, 2019 2:55 am GMT 0 Comments 2052 by : adminsrilanka

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்தார். அவரின் தாயாரே தாக்குதல்தாரியை அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை நேற்று (வியாழக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
நேற்றிரவு புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்கு ஒழுங்கையிலுள்ள றில்வானின் தாயாரின் வீட்டை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டு, அவரிடம் தற்கொலை குண்டுதாரியின் ஒளிப்படத்தை காட்டியபோது தாயார் அவரை அடையாளம் காட்டியுள்ளார். அதனை தொடர்ந்து தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த குண்டு தாரி கல்முனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெமட்டகொடையில் வசித்துவந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா