மத்திய வங்கி மோசடி – இரண்டு நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு !
In இலங்கை February 18, 2021 1:19 pm GMT 0 Comments 1221 by : Jeyachandran Vithushan

மத்திய வங்கி பினைமுறி மோசடி குறித்து விசாரணை செய்ய இரு நீதிமன்ற தீர்ப்பாயத்தை அமைக்க தலைமை நீதியரசர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய 2016 மார்ச் மாதம் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்குகள் குறித்து நீதிமன்ற தீர்ப்பாயத்தில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி.தொடவத்த, எம். இரஸதீன் மற்றும் மஞ்சுள திலகரட்ன ஆகியோர் அடங்கிய ஒரு நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.
இரண்டாவது நீதிமன்ற தீர்ப்பாய நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதியரசர் அமல் ரணராஜா, பலல்லே மற்றும் ஆதித்ய படபந்திகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.