மதுரை சிறையில் போராட்டம் நடத்திய கைதிகள் மீது வழக்குப்பதிவு
In இந்தியா April 24, 2019 7:08 am GMT 0 Comments 1464 by : Yuganthini

மதுரை மத்திய சிறையில், போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 25 கைதிகள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய சிறையில் பாதுகாப்பு கடமையிலுள்ள பொலிஸார் தங்களை துன்புறுத்துவதாக கூறி, கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டிருந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள், சிறை கட்டடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது குறித்த போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்ற பொலிஸாரை கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சிறைத்துறை பாதுகாவலர்கள் அளித்த முறைப்பாட்டுக்கமைய, போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீதும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவே குறித்த கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்க
-
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக
-
தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி
-
திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதா
-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊ
-
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (இன்று சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகா
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப