மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
In இலங்கை December 19, 2020 10:06 am GMT 0 Comments 1882 by : Jeyachandran Vithushan

மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டன.
பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியை இணைக்கும் திட்டத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தமையைத் தொடர்ந்து நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பல கட்டங்களின் கட்டுமானப் பணிகள் முன்னதாகவே தொடங்கப்பட்டிருந்தாலும் பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியின் கட்டுமானம் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது
தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, அதற்கான கட்டுமானங்களை விரைவாகத் தொடங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் கட்டுமான பணிகள் அடுத்த 48 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொத்துஹெர, பொல்கஹவெல, ரம்புக்கனை மற்றும் கலகெதர ஆகிய பகுதிகளில் 4 வீதி இடைமாறல்களூடாக மத்திய அதிவேக வீதி அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை கடந்த 20 ம் திகதி நாடாளுமன்றத்தில் கூடிய கோப் குழு, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.