மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்!
In இந்தியா November 10, 2020 4:53 am GMT 0 Comments 1519 by : Krushnamoorthy Dushanthini

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை இந்த மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் 10 உறுப்பினர்கள் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா ஒரு கெபினட் மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவியை வழங்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் ஆட்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங் கட்சி, தே.ஜ கூட்டணியில் இணைய தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் இ.பி.எஸ். உடன் அமித்ஷா பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சிலருக்கும், அமைச்சர் பதவி வழங்கும் திட்டம் உள்ளதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.